ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு 600 கோடி ரூபாய் சொத்து

By Fathima Mar 25, 2026 11:41 AM GMT
Report

பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மகனும் லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு 600 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர் காங்கிரசுக்கு 16 தொகுதிகள், பாஜக 10, அதிமுக-2, லஜக- 2 இடங்களில் போட்டியிடுகிறது.

இதில் காமராஜர் நகர், நெல்லித்தோப்பு என இரு தொகுதிகளில் லட்சிய ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது.

இக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்பு மனு தாக்கல் செய்தார், அதில் 600 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

ஜோஸ் சார்லஸ் மற்றும் அவரது மனைவி பெயரில் சுமார் 340 கோடி ரூபாய் அசையும் சொத்தும், 270 கோடி ரூபாய் அசையா சொத்தும் உள்ளது.

கைவசம் 20.59 லட்ச ரூபாய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுதவிர தங்கம், வைரம், சொசு கார், வெள்ளி பொருட்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் என மொத்தம் 600 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். 

ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு 600 கோடி ரூபாய் சொத்து | Jose Martin Declares Asserts Worth Rs 600 Crore