அண்ணாமலையை எப்படி விமர்சிக்கலாம்? ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டின் மகன் எச்சரிக்கை

BJP K. Annamalai Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Apr 01, 2025 10:20 AM GMT
Report

ஆதவ் அர்ஜுனாவுக்கு அவரது மனைவின் அண்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா

லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ். அவருக்கு புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

adhav arjuna - jose charles

இவரது சகோதரியைத்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், ஜோஸ் சார்லஸ் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக ஓய்வின்றி உழைக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தகாத வார்த்தைகளால் ஆதவ் அர்ஜூனா விமர்சித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றம்? தமிழிசை தகவல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றம்? தமிழிசை தகவல்

ஜோஸ் சார்லஸ் கண்டனம்

மன்னிப்பும் கேட்கிறேன். மாமனார் பணத்தை ஆதவ் அர்ஜூனா தவறாக பயன்படுத்துகிறார் என்ற அண்ணாமலையின் கருத்தை ஆதரிக்கிறேன். என் தந்தையின் பணத்தை, எங்கள் குடும்பத்தின் மரியாதையை தேவையற்ற பிரச்சனைகளால் கெடுத்து வருகிறார் ஆதவ் அர்ஜூனா.

பதவி மற்றும் பொருளாதாரப் பேராசை காரணமாக பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்து கொண்டு பல கட்சிகளில் இணைந்து வருகிறார் ஆதவ் அர்ஜூனா.

அவருடைய முட்டாள் தனமான செய்கிற செயல்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமே இல்லை. இதேபோல ஆதவ் அர்ஜுனா செயல்பட்டு வந்தால் நாங்கள் வழக்கு தொடருவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.