ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் இருந்து விலகிய முக்கிய வீரர் - சோகத்தில் ரசிகர்கள்
ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்று போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கடுமையாக போராடி டிரா செய்தது.
இதனிடையே 4வது போட்டியின் 2வது இன்னிங்ஸில் பேட் செய்யும் போது விரலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த ஜோஸ் பட்லர் காயம் தீவிரமாக இருப்பதால் 5வது போட்டியில் விளையாட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் 5வது போட்டியில் இருந்து விலகியுள்ள நாடு திரும்புகிறார். இந்நிலையில் மிக முக்கியமான பேட்ஸ்மேன் அணியில் இல்லை என்பது கூடுதல் பின்னடைவாக இருக்கிறது. இருப்பினும் மற்ற வீரர்கள் அணியில் இருக்கின்றனர். தோல்வியை தழுவி வருவதால், எங்களிடம் போதிய திட்டம் மற்றும் நோக்கம் இல்லை என நினைத்துவிட வேண்டாம். அன்றைய நாள் எங்களுக்கு சரியானதாக அமையவில்லை. 5வது போட்டியில் நிச்சயம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என நினைக்கிறேன் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.