இதுவரை யாருமே தொட முடியாத கோலியின் இடத்தை அசால்டாக கைப்பற்றிய பட்லர் - குவியும் பாராட்டு

Rajasthan Royals Royal Challengers Bangalore
By Swetha Subash May 28, 2022 11:39 AM GMT
Report

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 6624 ரன்களை குவித்து தற்போது வரை விராட் கோலி தான் முதலிடத்தில் உள்ளார்.

இதுவரை 223 போட்டியில் விளையாடியுள்ள கோலி, 6624 ரன்களை விளாசி 4 விக்கெட்டையும் எடுத்திருக்கிறார். இதன் மூலம் 2010-ம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் சீசனில் விராட் கோலி அடித்த 3-வது குறைந்தபட்ச ஸ்கோர் இது தான்.

இதுவரை யாருமே தொட முடியாத கோலியின் இடத்தை அசால்டாக கைப்பற்றிய பட்லர் - குவியும் பாராட்டு | Jos Butler Breaks Records Of Virat Kolhi

இதன் பிறகு கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தொடக்க வீரராக களமிறங்கிய கோலி, 16 போட்டியில் 7 அரைசதமும், 4 சதங்களும் அடித்து 973 ரன்களை குவித்தார்.

தற்போது வரை கிங் கோலியின் இந்த சாதனையை யாராலும் நெருங்க கூட முடியாது என்று ரசிகர்கள் கருதிய நிலையில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ஜோஸ் பட்லர், விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

நடப்பு சீசனில் 16 போட்டியில் விளையாடியுள்ள ஜாஸ் பட்லர் 824 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் ஒரே சீசனில் 4 சதங்கள் விளாசி, விராட் கோலியின் சாதனையை பட்லர் சமன் செய்துள்ளார்.

இதுவரை யாருமே தொட முடியாத கோலியின் இடத்தை அசால்டாக கைப்பற்றிய பட்லர் - குவியும் பாராட்டு | Jos Butler Breaks Records Of Virat Kolhi

இந்த நிலையில், பட்லருக்கு இறுதிப் போட்டியில் களமிறங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் பட்லர் ஒரு சதம் அடித்தால், ஒரே சீசனில் அதிக சதம் விளாசிய ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைப்பார்.

அதேபோல், ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக பவுண்டரிகள் (ஃபோர் + சிக்ஸ்) விளாசி விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஜோஸ் பட்லர். நடப்பு சீசனில் 123 பவுண்டரிகளை (78 ஃபோர்களும் 45 சிக்ஸர்களும்) விளாசியுள்ளார் ஜோஸ்.

இதற்கு முன்னதாக 2016-ல் விராட் கோலி 121 ( 83 ஃபோர்களும் 38 சிக்ஸர்களும் ) பவுண்டரிகளை அடித்திருந்தார். தற்போது கோலியின் அந்த சாதனையை முறியடித்து முன்னேறி சென்றுள்ளார் பட்லர்.