ஜோஸ் ஆலுக்காஸில் நகைகள் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை
வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நகைகள் கொள்ளை, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையானது நேற்று இரவு 10 மணிவரை செயல்பட்டிருக்கிறது.
இரவுநேர காவலர்களும் பணியில் இருந்ததால் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அதிகாலைக்குள் இந்த திருட்டு நடந்திருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது.
நகைக்கடையின் பின்புற சுவரை துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் கீழ்த்தளத்தில் இருந்த நகைகளை திருடிச்சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட எஸ்பி மற்றும் டிஐஜி ஆகியோர் சிசிடிவி காட்சிகளை வைத்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது திட்டமிடப்பட்ட திருட்டாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எஞ்சியிருக்கும் நகைகளை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.
இதன்பிறகே கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எவ்வளவு என்று தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே திருச்சி லலிதா ஜுவல்லரியிலும் இதேபோல் பின்பக்க சுவரை துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.