ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை - வெளியான சிசிடிவி காட்சிகள்

CCTV Theft Shop Jos Alukkas
By Thahir Dec 16, 2021 12:51 PM GMT
Report

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக வடக்கு மண்டல காவல் துறையின் துணை தலைவர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தின் முக்கிய பகுதியான தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகில் அமைந்துள்ளது பிரபல நகை கடை ஜோஸ்-ஆலுக்காஸ்.

5 தளங்களுடன் இயங்கி வரும் இந்த நகை கடையில் நேற்று(டிச 15) சுமார் 15 கிலோ மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன்,

வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வடக்கு மண்டல காவல் துறையின் துணை தலைவர் சந்தோஷ் குமார், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் விழுப்புரம் சரக காவல்துறையின் துணைத் தலைவர் பாண்டியன் ஆகியோர் கொள்ளை நடந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

இந்த சூழ்நிலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் பல கோடி மதிப்பில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது

You May Like This