சென்னை அணியின் அடுத்த பிராவோ இவர் தான் - உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்
கிரிஸ் ஜோர்டன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ளது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் பிராத் வெய்ட் அளித்துள்ள விளக்கம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 34 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இதனிடையே குஜராத் அணியுடனான ஆட்டத்தில் சென்னை அணியின் தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் முக்கிய காரணமாக மாறினார். இதனால் மும்பை அணியுடனான கடந்த ஆட்டத்தில் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் கிரிஸ் ஜோர்டன் தான் சென்னை அணியின் அடுத்த ட்வைன் பிராவோ என வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் பிராத் வெய்ட் தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அணியின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பிராவோ ஓய்வு பெற்றால் அவரது இடத்தை சரி செய்ய ஜோர்டன் இருப்பார் என அந்த அணி நிர்வாகம் முடிவெத்து இருப்பதாக நான் நினைக்கிறேன் என பிராத் வெய்ட் கூறியுள்ளார்.
மேலும் கிரிஸ் ஜோர்டன் சென்னை அணிக்காக இன்னும் பல வருடங்கள் விளையாடுவார் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.