மூத்த கட்டடக் கலைஞரை கரம்பிடித்த ஜோர்டன் இளவரசர் - கவனம் ஈர்த்த திருமணம்!

Marriage Jordan
By Sumathi Jun 03, 2023 05:41 AM GMT
Report

ஜோர்டான் நாட்டு இளவரசர், சவுதியின் கட்டிடக் கலை நிபுணரை திருமணம் செய்துள்ளார்.

இளவரசர்  திருமணம்

ஜோர்டானின் இளவரசர் ஹூசைன் (28). இவர் சவுதியின் கட்டிடக்கலை கலை நிபுணர் ராஜ்வா அல் சைஃப் (29) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

மூத்த கட்டடக் கலைஞரை கரம்பிடித்த ஜோர்டன் இளவரசர் - கவனம் ஈர்த்த திருமணம்! | Jordan S Crown Prince Wedding To Saudi Architect

தலைநகர் அம்மானில் நடைபெற்ற இந்தத் திருமணமத்தில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் உட்படஉலகப் பிரபலங்கள், அரசக் குடும்பங்கள் என பலரும் கலந்து கொண்டனர். திருமண விருந்தில் சுவை மிகுந்த உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

உலக பிரபலங்கள் பங்கேற்பு

அங்கு அரசு விடுமுறை விடுக்கப்பட்டு, அரசு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் செய்யப்பட்டது. திருமணம் முடித்த பின் இளவரசரையும், அவரது மனைவியையும் வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொடியசைத்து வரவேற்றனர்.

இந்தத் திருமணம் ஜோர்டான் - சவுதி இடையே அரசியல் ரீதியிலான உறவை மேலும் மேம்படுத்தும் என்பதால் கூடுதல் கவனத்துடன் வளைகுடா நாடுகள் இந்த நிகழ்வை உற்று கவனிக்கின்றன.