மழை நேரத்தில் மைதான ஊழியர்களுக்கு உதவிய ஜான்டி ரோட்ஸ் : வைரலாகும் வீடியோ
சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கான நேற்றைய ஐபிஎல் போட்டியின் போது மழை பெய்தது அப்போது தென்னாப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் ஊழியர்களுக்கு உதவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஐபிஎல் தொடர்
சென்னை லகொனோ மோதல் ஐபிஎல் 16வது சீசனின் 46வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று களமிறங்கியது இதில் பீல்டிங்கை தேர்வு செய்த சென்னை அணி லக்னோ அணிகளின் விக்கெட்டுகளை பறிக்க போட்டியில் 19.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால், போட்டி நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பிரித்து வழங்கப்பட்டது. இதன் மூலம் தலா 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் லக்னொ அணி 2-வது இடத்திற்கும் சென்னை அணி 3-வது இடத்திற்கும் முன்னேறி உள்ளது.
வைரலாகும் வீடியோ
இந்த நிலையில் மழை குறுக்கிட்ட போது மைதானத்தில் நீர் தேங்கமால் இருக்க ஊழியர்கள் படுதாவை கொண்டு வந்து மூடும் நடவடிக்கையில் இறங்கினர் , அப்போது மைதான் ஊழியர்களுக்கு ஜான்டி ரோட்ஸ் உதவிய வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.