’இதுக்காக அனிருத்த கல்யாணம் பண்ணிப்பேன் : பிரபல பாடகி போட்டு உடைத்த ரகசியம்

Anirudh Ravichander Jonita Gandhi
By Irumporai Jun 05, 2022 11:54 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கொண்டாட்டமான இசைக்கும், பிறந்த குழந்தைகளையும் ஆட வைக்கும் பாடல்களுக்கு சொந்தக்காரராகவும் வலம் வருபவர் இளம் இசையமைப்பாளர் அனிருத். 2012ஆம் ஆண்டு ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் அறிமுகமாகி, இன்று ரஜினி, கமல் ஆகிய உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு அனிருத் வளர்ந்துள்ளார்.

 பாடல்களில் ஹிட் கொடுக்கும் ஜொனிடா ,அனிருத் 

அதே சமயம் பிரபல பாடகி ஜொனிட்டா காந்தியுடன் அனிருத் பாடும் பாடல்கள் அனைத்தும் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றன. இந்நிலையில், முன்னதா திருமணம் குறித்து ஜொனிடா காந்தியிடம் நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது

’இதுக்காக அனிருத்த கல்யாணம் பண்ணிப்பேன் : பிரபல பாடகி போட்டு உடைத்த ரகசியம் | Jonita Gandhi Marry Anirudh

அனிருத்தை திருமணம் செய்து கொள்வேன்

அதில், ”ரன்வீர், சூர்யா, அனிருத் மூவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள்? என்ற கேள்விக்கு,அனிருத் தான் சிங்கிள், அவருக்கு மட்டும் தான் இதுவரை திருமணம் நடக்கவில்லை, அதனால் அனிருத்தை நான் திருமணம் செய்து கொள்வேன்” என ஜொனிடா பதில் அளித்துள்ளார்.

ஏற்கெனவே இந்த ஜோடியை ரசிகர்கள் ரசித்து வரும் நிலையில், ஜொனிட்டாவின் இந்த பதில் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.