பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்... - கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்து ஓட்டம்..!

Philippines Earthquake Viral Photos
By Nandhini Mar 07, 2023 08:59 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

தெற்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று நிலநடுக்கம்

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று மதியம் நிலநடுக்கத்தின் மையம் டாவோ டி ஓரோவின் மலை சார்ந்த தங்கச் சுரங்க மாகாணத்தில் உள்ள மரகுசன் நகராட்சியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக தீங்கு விளைவிக்கக்கூடியவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்க அதிர்வு சுமார் 30 வினாடிகள் நீடித்தது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

jolts-southern-philippines-earthquake-magnitude