வன்முறையில் 130 பேர் உயிரிழந்த கால்பந்து மைதானத்தை இடிக்க இந்தோனேசிய அரசு முடிவு - வெளியான முக்கிய தகவல்...!

Joko Widodo Football
By Nandhini Oct 18, 2022 01:33 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

வன்முறையில் 130 பேர் உயிரிழந்த கால்பந்து மைதானத்தை இடிக்க இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது.

கால்பந்து மைதானத்தில் கலவரம்

கடந்த 1ம் தேதி இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது. அப்போட்டியில், உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா போட்டியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் கடைசியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

130 பேர் உயிரிழப்பு

தன்னுடைய சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். இதனையடுத்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆடுகளத்திற்கு ஓடிச் சென்று களத்தில் இருந்த அரேமா வீரர்கள் தாக்கினர்.

உடனடியாக போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசி அடித்தனர். இதனால் பலர் ஓடும்போது, கூட்ட நெரிசலில் சிக்கி கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

joko-widodo-indonesia-football-pitch

மைதானத்தை இடிக்க இந்தோனேசிய அரசு முடிவு

இந்நிலையில் வன்முறை நடைபெற்ற கால்பந்து மைதானத்தை இடிக்க இந்தோனேசிய அரசு முடிவு செய்திருக்கிறது.

இது குறித்து இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ செய்தியாளர்களிடம் கூறுகையில், " மலாங்கில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தை இடித்து, பிபா தரத்தின்படி நாங்கள் மீண்டும் அதை கட்டுவோம். வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய முறையான வசதிகளுடன் மைதானம் மீண்டும் கட்டப்படும்" என்றார்.