அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்.- பொதுமக்கள் சுற்றுலா செல்ல சூப்பரான இடம்!
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் ஜோக் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல ஆர்வமடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் உலக புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சிஅமைந்து உள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நீர்வீழ்ச்சிகளில், ஜோக் நீர்வீழ்ச்சி உலக அளவில் 13–வது இடத்தில் உள்ளது.
ஷராவதி ஆற்றில் இருந்து உருவாகும் இந்த நீர்வீழ்ச்சியில், சுமார் 293 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் ஜோக் நீர்வீழ்ச்சி 4 கிளைகளாக பிரிந்து அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.பெரும் இரைச்சலுடனும் தண்ணீர் விழும் நீர்வீழ்ச்சிக்கு ‘ரோரா‘ என்றும், தண்ணீர் வேகமாக சீறிப்பாய்ந்து விழும் நீர் வீழ்ச்சிக்கு ‘ராக்கெட்‘ எனவும் பெயரிடப்பட்டு உள்ளது.
இயற்கை அழகை ரசிக்க ஒவ்வொரு ஆண்டும் இந்த நீர்வீழ்ச்சியை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருவது வழக்கம்.
இந்த நீர்வீழ்ச்சியில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து குறைவாக இருந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் ஜோக்நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக குவிந்து வருகின்றனர்.