விஜய்யுடன் அரசியலுக்கு வருகிறேன்..? பிரஷாந்த் பரபரப்பு பேட்டி
நடிகர் விஜய் அரசியலுக்கு அழைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் பிரஷாந்த் பதிலளித்துள்ளார்.
பிரஷாந்த் பதில்
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை மீண்டும் பிடித்திட முயன்று வருகின்றார் பிரஷாந்த். விஜயுடன் அவர் இணைந்துள்ள "G.O.A.T" திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரஷாந்த், விஜய் எப்போதுமே நல்லது செய்ய நினைப்பவர். அவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான்.
அரசியலுக்கு..
அவருக்கு என் மனப்பூர்வ வாழ்த்துக்கள் என்றார் பிரசாந்த். மேலும், அரசியலுக்கு வருவது அவரவரின் விருப்பம் என்று கூறி, தேர்ந்தெடுப்பது மக்கள் தான் என்று தெரிவித்தார்.

விஜய் உங்களை அழைத்தால் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா..? என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, அது காலத்தின் கையில் தான் உள்ளது என்று குறிப்பிட்டு தான் தற்போது நடிகர் தான் என்று தெரிவித்தார்.
வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்! காற்றில் பறக்கும் மக்களின் காணி மக்களுக்கே வாக்குறுதி! IBC Tamil
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது IBC Tamil
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan