மாணிக்கம் தாகூர் தவெகவில் இணையலாம் - அண்ணாமலை விமர்சனம்!

Ysr Congress Tamil nadu TVK
By Vinoja Nov 22, 2026 06:52 AM GMT
Report

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணையலாம் என்று வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தவறு செய்யவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும், விலைவாசி உயர்வு இல்லை என்றும் மாணிக்கம் தாகூர் கூறி வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

மாணிக்கம் தாகூர் தவெகவில் இணையலாம் - அண்ணாமலை விமர்சனம்! | Join Tvk Annamalai Slams Manickam Tagore

மேலும், மாணிக்கம் தாகூரின் கருத்துகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்ந்து எதிர்க்கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் கூறினார்.

எனவே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தவெகவில் அடிப்படை உறுப்பினராக இணைவதே அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும், முருகப்பெருமானை வழிபடுவது தொடர்பாக மாணிக்கம் தாகூர் தனக்குப் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய அண்ணாமலை, தான் ஒவ்வொரு ஆண்டும் பழனி முருகனுக்கு காவடி எடுத்து வழிபடுவதாகவும் தெரிவித்தார்.

யார் முருகனை வழிபட வேண்டும், எப்படிக் காவடி எடுக்க வேண்டும் என்று யாரும் அறிவுரை கூறத் தேவையில்லை என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.