மோடி ஜி நீங்கள் பேசாமல் எங்கள் கட்சியில் சேர்ந்திடுங்கள் - பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த இஸ்ரேல் பிரதமர்
ரோமில் நடந்த ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்
இந்த ஜி 20 மாநாட்டில், இந்திய பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியிடம் கைகுலுக்கிய நப்தலி பென்னெட், எங்கள் நாட்டில் நீங்கள் மிகவும் பிரபலமான நபர்.

ஆகவே, எங்கள் கட்சியில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என சிரித்தபடி அழைப்பு விடுத்தார். இதைக் கேட்ட பிரதமர் மோடியும் சிரித்தார்.
அதன்பின், இருவரும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.