மகள் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்துவிடுங்கள் - நடிகர் தனுஷிடன் கெஞ்சினாரா ரஜினிகாந்த்?
தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்துவிடுங்கள் மாப்பிள்ளை என்று நடிகர் தனுஷிடம் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக கிசு கிசுக்கப்படுகிறது.
திருமணம் - விவாகரத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் இடையில் அடிக்கடி ஏற்பட்டு வந்த மனகசப்புகளால் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர் அவர்களின் அறிவிப்பு இருவரது குடும்பத்தினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
விவாகரத்துக்கு பின் தனுஷ் தான் நடித்து வரும் படங்களிலும், ஐஸ்வர்யா தன்னுடைய இயக்குனர் வேளையிலும் பிசியாக இருந்து வருகிறார்கள்.
விவாகரத்துக்கு பின் ஒரு பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது.
மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா
இந்த நிலையில் நீண்ட நாட்களா மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்து முடிவால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ரஜினிகாந்த்.
மாப்பிள்ளை தனுஷுடன் மகள் ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் தற்போது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. நடிகர் ரஜினி தனது மாப்பிள்ளை தனுஷை தனது இல்லத்திற்கு அழைத்து மகள் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர சொல்லி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு நடிகர் தனுஷ் சம்மதம் தெரிவித்ததாகவும் கிசு கிசுக்கப்படுகிறது. எனவே விரைவில் மீண்டும் தனுஷ் - ஐஸ்வர்யா இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.