சிங்கில் டோஸ்தான் ..ஜான்சன் அண்ட் ஜான்சன்...அனுமதிக் கோரி விண்ணப்பம்!
தாங்கள் தயாரித்த சிங்கில் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம் தெரிவித்துள்ளது. டெல்டா வகை கரோனா வேகமாக பரவிவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பல நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவரும் நிலையில்,ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த ஒரு தவணை தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது .
இதுகுறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்திய நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஒரு தவணை தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் பிரைவேட் லிமிடட் இந்திய அரசிடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி விண்ணப்பித்துள்ளது.