புற்றுநோய்: வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பிரபல நிறுவனம் - பின்னணி என்ன?

Johnson & Johnson United States of America
By Sumathi Apr 07, 2023 07:40 AM GMT
Report

 ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தர முன்வந்துள்ளது.

 ஜான்சன் & ஜான்சன்

குழந்தைகளுக்கான பவுடர், ஷாம்பூ, எண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்யும் நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சன். இந்தியாவிலு இது பிரபலம். இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்களை பயன்படுத்திய பெண்களுக்கு கருப்பை புற்று நோய் ஏற்பட்டுள்ளதாவும்,

புற்றுநோய்: வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பிரபல நிறுவனம் - பின்னணி என்ன? | Johnson Johnson Offers 9Bn Settle Talc Claims

நுரையீரல் மற்றும் உடல் உறுப்புக்களை பாதிக்கும் புற்றுநோய்களும் ஏற்படுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. சுமார் கிட்டதட்ட 60,000 வழக்குகள் இந்த நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ளது.

இழப்பீடு

‘பல ஆண்டுகள் வழக்குகளுக்கு எதிராக வாதாடுவது, செலவுகளை அதிகப்படுத்தும். மேலும் அதிக தொகை செலவாகும்’என்று அந்நிறுவனத்தின் துணை தலைவர் எரிக் ஹாஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது, இந்த வழக்குகளை முடித்து வைக்க, ரூ.890 கோடி வழங்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் இவ்வளவு தொகையை நஷ்ட ஈடாக எந்த நிறுவனமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த முடிவை அறிவித்ததுமே அந்நிறுவனத்தின் பங்குகள் 3% அதிகரித்துள்ளது.