பவுடர் விற்பனையை நிறுத்துகிறது ஜான்சன் அண்ட் ஜான்சன் : காரணம் என்ன?

By Irumporai Aug 12, 2022 12:58 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

குழந்தைகளுக்கான பிரபல பால் பவுடர் நிறுவனமான ஜான்சன் பவுடர் நிறுவனம் தனது விற்பனையினை நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

ஜான்சன் அண்ட் நிறுவனம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரில் ஆஸ்படாஸ் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதாகக் கூறி, கடந்த 2020, மே மாதம் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

இதுதொடர்பாக அமெரிக்காவில் பல கோர்ட்டுகளில் தொடர்ந்து வழக்கு நடந்து வந்தது. பல சட்டப் போராட்டங்களுக்குப்பின் அமெரிக்கா, கனடாவில் விற்பனை நிறுத்தப்பட்டது.

விற்பனையினை நிறுத்தும் ஜான்சன்

இந்த நிலையில் 2023ம் ஆண்டிலிருந்து டால்கம் அடிப்படையிலான குழந்தைகளுக்கான பவுடர் விற்பனையை நிறுத்துவதாக ஜான்சன் அன்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜான்சன் நிறுவனம் வெளியிட்டஅறிக்கையில் :

எங்களுடைய குழந்தைகளுக்கான அனைத்து டால்கம் பவுடரையும் மாற்றப் போகிறோம். எங்களின் பொருட்கள் பாதுகாப்பானவை. நீண்ட காலத்துக்கு எது வளர்ச்சிக்குரியது என்று பார்த்து, மதிப்பீடு செய்து பொருட்களைத் தயாரிக்கிறோம்.

பவுடர் விற்பனையை நிறுத்துகிறது ஜான்சன் அண்ட் ஜான்சன்  : காரணம் என்ன? | Johnson Drops Talcum Powder Lawsuits Mount

இன்று உலகளவில் அனைத்துக் காரணிகளையும் ஆய்வு செய்தோம், எங்களின் பொருட்களுக்காந தேவை, வேறுபாடுகள், நுகர்வோர் மனநிலை ஆகியவற்றை ஆய்வுசெய்தோம். இதையடுத்து, 2023ம்ஆண்டிலிருந்து எங்கள் நிறுவனப் பவுடர் விற்பனையினை நிறுத்த போவதாக தெரிவித்துள்ளது.