தொண்டு நிறுவனங்களுக்கு 1 மில்லியன் டாலர் தானம் - நடிகர் ஜானி டெப் முடிவு!

United States of America Johnny Depp
By Vinothini Jun 15, 2023 07:02 AM GMT
Report

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜானி டெப் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் வழக்கில் இழப்பீடு பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜானி டெப்

திரையுலகில் பிரபலமான ஜானி டெப் ஹாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். அதில் இவரது நடிப்பில் வெளியான ஜாக் ஸ்பாரோ என்ற படம் உலகில் உள்ள அணைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.

johnny-depp-to-donates-1-million-dollar

மேலும், இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில்தான் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறி ஜானி டெப்பின் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

பிறகு அவர் மீது அவதூறு வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தார். தனது பெயருக்கு கலங்கம் விளைவுக்கும் வகையில் ஆம்பர் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாக கூறி ஜானி டெப் பதில் மனு தாக்கல் செய்தார்.

தானம்

இந்நிலையில், இவரது முன்னாள் மனைவியான ஆம்பர் ஹேர்ட் பதிவு செய்த வழக்கு ஆதாரமற்றவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், அவதூறு பரப்பியதற்காக இவரது முன்னாள் மனைவிக்கு 10 மில்லியன் டாலர் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று உத்தரவளிக்கப்பட்டது.

johnny-depp-to-donates-1-million-dollar

பின்னர், இறுதியில் ஜானி டெப்புக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக கொடுத்து மொத்த வழக்கையும் முடித்துகொள்வதாக மனைவி ஆம்பர் ஹேர்ட் அறிவித்தார்.

மேலும், இந்த தொகையை நடிகர் ஜானி டெப் 'மேக் ஏ பிலிம் பவுண்டேஷன்', 'தி பெயின்டட் டர்ட்டில்', 'ரெட் பெதர்', 'டெடியரோ சோசைட்டி' மற்றும் 'அமசோனியா பண்ட் அலயன்ஸ்' ஆகிய ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.