விராட் கோலிக்கு wwe வீரர் ரசிகரா?- கொண்டாடும் ரசிகர்கள்
விராட் கோலியின் படத்தை wwe வீரர் ஜான்சேனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் வரும் ஜூன் 18-ஆம் தேதி மோத உள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் WWE நட்சத்திர வீரர் ஜான்சேனா பகிர்ந்துள்ளார்.
அதில் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் புரிதலுக்காக இந்த படங்களை விளக்கங்கள் ஏதும் இல்லாமல் பகிர்கிறேன்.பார்த்து மகிழுங்கள் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியா - நியூசிலாந்து அணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதியில் மோதிய போது ஜான்சேனா கோலி படத்தை பகிருந்திருந்தார்.
இதனை வைத்துப் பார்க்கும் போது அவர் விராட் கோலியின் தீவிர ரசிகர்களாக இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil