நன்றி, விசுவாசம் இருந்தால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்- ஜான் பாண்டியன் பேச்சு
அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியனுக்கு எழும்பூர் தனித்தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜான் பாண்டியனை எதிர்த்து திமுகவின் பரிதி இளம்வழுதி வெற்றி அடைந்தார்.
ஜான் பாண்டியன் தலித் சமுதாயத் தலைவராக அறியப்பட்டாலும் நாடார், வன்னியர் சமுதாயத்துடன் இணக்கமாக இருக்கக்கூடியவர் என்பதால் அவருக்கு எழும்பூரில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறதாம். இதனையடுத்து, அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் நேற்று ராமநாதபுரத்தில் முதுகுளத்தூரில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தேவேந்திர குல வேளார்கள் என்ற பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட நமக்கு உறுதுணையாக இருந்தது அதிமுக அரசு தான். கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாற்றத்திற்கு காரணமாக அமைந்த அதிமுகவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
விசுவாசமாக அதிமுகவுக்கு வாக்களியுங்கள். நாடாளுமன்றத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் என்று பெயர் மாற்றம் செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்தபோது திமுக வெளிநடப்பு செய்ததை என்றும் உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.