ஆன்டிவைரஸ் நிறுவனர் ஜான் மெக்கஃபே தற்கொலை.. காரணம் என்ன?

suicide johnmccaffey
By Irumporai Jun 24, 2021 04:58 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

  மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியான மெக்கஃபே நிறுவனத்தின் நிறுவனர் ஜான் மெக்ஃபே தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளதுசர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்கஃபே 1987-ம் ஆண்டில் கலிஃபோர்னியாவில்  மெக்ஃபே கார்ப் நிறுவனத்தைத் தொடங்கினார்.

இந்த நிறுவனம் கணினிகளுக்கு ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர்களைத் தயாரிப்பதில்  முதன்மை நிறுவனமாக  கார்ப் இருந்து வந்தது. இந்த நிலைஅயல் 1994-ம் ஆண்டு அவர் அந்த நிறுவனத்திலிருந்து ஜான் மெக்ஃபேராஜினாமா செய்தார்.

கார்ப்  நிறுவனத்தை 2010-ம் ஆண்டு இன்டெல் வாங்கியது. இந்த நிலையில் தற்போது 75 வயதாகும் மெக்ஃபே  2014 மற்றும் 2018 அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் முரையாக வரி செலுத்தாமல் இருந்ததாக  குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த  நிலையில் 2020-ம் ஆண்டு அக்டோபரில் ஸ்பெயினின் பார்சிலோனா விமானநிலையத்தில் அந்த நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டார் ஜான் மெக்ஃபே.

ஆன்டிவைரஸ் நிறுவனர் ஜான் மெக்கஃபே  தற்கொலை.. காரணம் என்ன? | John Mccaffey Suicide What Is The Problem

பார்சிலோனா சிறையில் இருந்த அவரை அமெரிக்கா தஙகலிடம் ஒப்படைக்க வேண்டுமென தொடர்ந்து ஸ்பெயின் அரசிடம்  தொடர்ந்து  கோரிக்கை வந்தத்து.

அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை ஏற்று ஸ்பெயின் தேசிய நீதிமன்றம் மெக்கஃபேவை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதியளித்திருந்தது.

மெக்கஃபே வின் வரி ஏய்ப்புக்  நிரூபிக்கப்பட்டால் அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என கூறப்பட்டது

. இந்தச் சூழலில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் மெக்கஃபே சிறையில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.

நான்கு ஆண்டுகளில் மெக்கஃபே 12 மில்லியன் டாலர்களை வருமானம் ஈட்டியிருந்ததாகவும் ஆனால், அதற்கு முறையாக வரி செலுத்தவில்லை என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது .

கிரிப்டோகரன்சியை உலக பய்ன்பாடுக்கு கொண்டு வரஆதரவாளராக இருந்தார் மெக்கஃபே.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டுயிட்டு  தோல்வியினையும் சந்தித்துள்ளார். அரசுக்கு எதிராக சதி செய்தார் என்கிற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.

சொல்ல போனால் சில பிரபலங்களின் மரணங்கள் ஏன் நிகழ்ந்தது என்பது ஒரு புதிராகவே இருக்கு அதே போல்தான் மெக்கஃபே மரணமும்.