நடுரோட்டில் நடிகைக்கு முத்தம் கொடுத்த பிரபல நடிகர் - காதலர் தினத்தில் நிகழ்ந்த சம்பவம்
காதலர் தினத்தை முன்னிட்டு நடுரோட்டில் நடிகைக்கு பிரபல நடிகர் முத்தம் கொடுத்த சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காதலர் தினம் நேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது காதலி, மனைவி ஆகியோரின் படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அந்த வகையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரையில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ஜான் கொக்கென். 'வீரம்' படத்தில் வில்லனாக நடித்த அவருக்கு சார்பட்டா படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இவர் கேரளாவை சார்ந்த ஆந்திராவை சார்ந்த நடிகை பூஜா ராமசந்திரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருவர்.
அந்த வகையில் காதலர் தினத்தை ஜான் கொக்கன், பூஜா ராமசந்திரன் ஜோடி பெங்களூரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து ஜான் கோக்கெனும் பூஜா ராமச்சந்திரனும் சாலையில் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா ராமச்சந்திரன் பகிர்ந்துள்ளார்.