திடீரென ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா - ரசிகர்கள் அதிர்ச்சி
உலக புகழ்பெற்ற வீரர் ஜான் சீனா, தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஜான் சீனா
2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமான ஜான் சீனா பிரபலமானார். WWE ஜாம்பவான்களான தி ராக், ட்ரிபிள் ஹெச், ரேண்டி ஆர்ட்டன், தி அண்டர்டேக்கர் உள்ளிட்டொருடன் மோதியுள்ளார்.

இந்நிலையில், WWE மல்யுத்த போட்டிகளில் 17 முறை சாம்பியன் பட்டம் வென்ற உலக புகழ்பெற்ற வீரர் ஜான் சீனா, தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வரும் டிசம்பர் 13-ம் தேதியுடன் மல்யுத்த போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
WWE இன் தூதர்
சுமார் 20 ஆண்டுகளாக இத்துறையில் அசத்தி வந்த ஜான் சீனா, அடுத்த கட்டமாக தனது முழு கவனத்தையும் சினிமா துறையில் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜான் சீனா ஒரு சமீபத்திய நேர்காணலின் போது தனது ஓய்வுக்குப் பிந்தைய திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

WWE இன் தூதராக பணியாற்றப்(WWE ambassador) போவதாகக் கூறியுள்ளார். மல்யுத்தம் தவிர ’தி சூசைட் ஸ்குவாட்’, ‘ஃப்ரீலான்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், டிசி காமிக்ஸின் பிரபலமான ‘பீஸ்மேக்கர்’ வெப் தொடரில் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.