தவெகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி? என்ன செய்யப் போகிறார் விஜய்?

Thamizhaga Vetri Kazhagam
By Fathima Feb 05, 2026 06:46 AM GMT
Report

சட்டப்பேரவை தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகம் தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில், அரசியல் வியூக தொகுப்பாளராக கருதப்பட்ட ஜான் ஆரோக்கியசாமி தவெகவில் இருந்து விலகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிக்கட்சியாக களமிறங்கவுள்ள தவெக முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது, இதற்காக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் தலைவர் விஜய்.

இந்நிலையில் விஜய்யின் நன்மதிப்பை பெற்ற ஜான் ஆரோக்கியசாமி விரைவில் தவெகவில் இருந்து விலகலாம் என கூறப்படுகிறது.

தவெகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி? என்ன செய்யப் போகிறார் விஜய்? | John Arokiasamy Resigned From Tvk

ஆதவ் அர்ஜுனாவின் வருகைக்கு பின்னர் தனக்கான மதிப்பு குறைந்துவிட்டதாக ஜான் ஆரோக்கியசாமி நினைப்பதால் உள்கட்சி மோதல் வெடித்துள்ளது.

கட்சியின் தேர்தல் வியூகம், மாநாடு குறித்த திட்டமிடல் போன்ற பணிகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்தவர் ஜான் ஆரோக்கியசாமி.

தற்போது ஆதவ் அர்ஜுனா ஊடகங்களில் தன்னிச்சையாக பேசி வருகிறார், இதுதவிர என்.ஆனந்த் போன்றோராலும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தவெகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி? என்ன செய்யப் போகிறார் விஜய்? | John Arokiasamy Resigned From Tvk

மிக முக்கியமாக தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆதவ் அர்ஜுனா தன்னுடைய வீட்டில் வைத்த விருந்திலும் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் அவரது குழுவினர் பங்கேற்கவில்லை.

தேர்தல் வியூக பணிகளுக்காக ஆதவ் அர்ஜுனா குழுவினர் முழுவீச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர், அந்த குழுவிலும் இவர் இடம்பெறவில்லை, விலகிக்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் ஜான் ஆரோக்கியசாமி விலகுவாரா அல்லது விஜய்யின் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

தவெகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி? என்ன செய்யப் போகிறார் விஜய்? | John Arokiasamy Resigned From Tvk