இனி ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார் - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பு
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த வருடம் இறுதி வரை எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் நாட்டிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கை காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார்.
இதனிடையே அவரது வலது முழங்கையில் ஸ்கேன் செய்த போது காயம் மோசமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள போட்டிகளில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த ஆண்டில் இறுதிவரை நடக்கவுள்ள அனைத்து வகை கிரிக்கெட் தொடர்களிலும் ஆர்ச்சர் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தொடர்ந்து, டி20 உலகக் கோப்பை , ஆஷஸ் தொடர் என அனைத்திலும் அவர் விளையாட மாட்டார்.
தனது முழங்கை காயம் காரணமாக கடந்த மே மாதம் ஜோப்ரா ஆர்ச்சர் அறுவை சிகிச்சை செய்தார். சிகிச்சைக்கு பிறகு கடந்த மாதம் கிரிக்கெட் விளையாட்டுக்கு திரும்பிய அவர் பந்துவீசுகையில் கையில் அசௌகரியத்தை உணர, மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இதில் காயம் தீவிரமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video

Optical illusion: குட்டீஸ் உங்கள் கண்களை சோதிக்கலாம்...இதில் வாத்துக் குஞ்சு எங்கே மறைந்துள்ளது? Manithan
