ஜோ பைடனின் பாதுகாப்பு படையிலிருந்து 12 வீரர்கள் நீக்கம்: விசாரணையில் அம்பலமானது என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் பதவியேற்பு நீண்ட கலவரங்களுக்குப் பிறகு இன்று நடைபெற இருக்கிறது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஜோ பைடனின் பதவியேற்பு விழாவிற்கு 20,000க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனவரி 6-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதலுக்குப் பிறகு ஆயுதம் தாங்கியவர்கள் கலகத்தில் ஈடுபடக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளதால் தலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களே உள்ளிருந்த்தும் தாக்கக்கூடும் என அச்சம் எழுந்ததால் அனைத்து வீரர்களும் உளவுத்துறையால் தீவிரமாக கண்கானிக்கப்பட்டு வந்தனர்.
இதில் 12 வீரர்களுக்கு கலவரக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கடந்த காலங்களில் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதாகவும் கண்டறிந்து அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.