விராட் கோலியை கண்டு பயப்படும் இங்கிலாந்து வீரர்கள் - உண்மையை போட்டுடைத்த கேப்டன் ஜோ ரூட்
இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை வெல்ல இது ஒன்றே வழி என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தனது திட்டம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமனில் உள்ளன.
4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கேப்டன் விராட் கோலி குறித்தும், மீதமுள்ள டெஸ்ட் போட்டிகள் குறித்தும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் செய்தியாளர்கள் சந்திப்பில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு உலகத்தரம் வாய்ந்த அணியாகும். அவர்களை குறைத்து எடைப்போட்டு நாம் ஏமாந்துவிடக் கூடாது என கூறியுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் வென்றதற்கான முக்கிய காரணம் பவுலர்கள் தான்.
நாங்கள் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனான கோலியை அவுட் செய்வதற்கான வழிகளை கண்டுபிடித்துள்ளோம்.
அவரை அடக்கி வைத்திருப்பதே நாங்கள் வெற்றி பெற ஒரே வழி என்றும் எப்போதும் சிறந்த வீரர்களை அவுட் செய்வதற்கான வழிகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.