கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ஜோ ரூட் - ரசிகர்கள் அதிர்ச்சி..!
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்த ஜோ ரூட் விலகினார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வருபவர் ஜோ ரூட். இவரது தலைமையில் இங்கிலாந்து அணி இதுவரை 27 டெஸ்ட போட்டிகளில் விளையாடி வென்றுள்ளது.
அண்மையில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியுற்றது.
இந்நிலையில்,இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜோ ரூட் இன்று அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் பறிகொடுத்த இங்கிலாந்து அணி,வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தது.
கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.