‘எப்பவும் நான்தான் கெத்து’ -வரலாறு படைத்தார் ஜோ ரூட்
இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய, 2வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கிய 3வது போட்டியில் இங்கிலாந்துஅணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே இங்கிலாந்து அணியின் கேப்டன் சத்தமில்லாமல் பல சாதனைகளை படைத்துள்ளார்.
நடந்து முடிந்த 3 போட்டிகளில் 3 சதங்கள் அடித்துள்ள அவர், இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக 27வது வெற்றியை பெற்று கொடுத்துள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக வெற்றிகள் பெற்று கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் முன்னாள் வீரர் மைக்கெல் வாகனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை அவர் பிடித்துள்ளார்.