படக்கூடாத இடத்தில் பட்ட பந்து - சுருண்டு விழுந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்

joeroot AUSvENG mitchealstarc
By Petchi Avudaiappan Dec 21, 2021 12:23 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்டிற்கு உயிர் நாடியில் நங்கென விழுந்த அடி, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில்  468 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கும் வினையாக அமைந்தது. அவர் 24 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வந்தார். அப்போது ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து, ஜோ ரூட்டின் உயிர் நாடியில் பலமாக பட்டது. எதிர்பாராமல் விழுந்த அடியால், மைதானத்திலேயே ஜோ ரூட் சுருண்டு விழுந்தார். உலகமே ஒரு நிமிடம் நின்றது போல, அவரின் அழுகை அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

இந்நிலையில் இந்த சம்பவத்தை வைத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெக்ஸ்டர் குக், கிண்டல் அடித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது குக்கிற்கு இதே போன்று உயிர்நாடியில் அடி விழுந்து சுருண்டார். அப்போது, ரூட்டும் அருகே ஃபீல்டிங் செய்துக் கொண்டிருந்தார். இதனை குறிப்பிட்டு பேசிய குக், என்னை பற்றிய பேச்சுக்கள் சுற்றிக்கொண்டே தான் இருந்தது. ஆனால் நான் நன்றாக தான் இருந்தேன். அந்த சம்பவத்திற்கு பிறகு தான் எனக்கு 2 குழந்தைகள் பிறந்தது. எனினும் ரூட்டின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை என நக்கலாக பதிலளித்துள்ளார்.