ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர் இவர் தான் - ஐசிசி அறிவிப்பு

 ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை இங்கிலாந்து அணி டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் தட்டிச் சென்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி மாதந்தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான விருதை இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தட்டிச் சென்றுள்ளார்.

ஜோ ரூட் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக மூன்று சதங்களுடன் 507 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் அவர் பிடித்தார்.

இதேபோல் பெண்களுக்கான கிரிக்கெட்டில் அயர்லாந்து ஆல்-ரவுண்டர் எய்மியர் ரிச்சார்ட்சன் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்