“எல்லாமே என் தப்பு தான்” - கதறிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்
2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்தியாவை ஆல் அவுட் ஆக்க முடியாதது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்ப, பவுலர்களான பும்ரா,ஷமி ஆகியோர் சிறப்பாக விளையாடி சிறப்பான முன்னிலையை ஏற்படுத்தினர்.
இது இந்திய அணி வெற்றி பெற மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் ஒரு கேப்டனாக இந்தத் தோல்வியை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றும், ஷமி, பும்ராவின் பார்ட்னர்ஷிப்தான் இக்கட்டான நிலைக்கு எங்களை கொண்டு சென்றுவிட்டது என்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்களை தான் குறைத்து கணித்துவிட்டதாகவும், அது தவறு என புரிந்துக்கொண்டேன். அவர்கள் எத்தகைய பந்தையும் எதிர்கொண்டு விளையாடும் திறன் கொண்டவர்கள் எனவும் ஜோ ரூட் கூறியுள்ளார்.