நவம்பர் 15-ம் தேதி: சீன அதிபரை சந்திக்கிறார் ஜோ பைடன்
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்காவின் 46ஆவது அதிபரானர் ஜோ பைடன்.
அதன் பிறகு அவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் சந்தித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், ரஷ்யா அதிபர் புதின் அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பைடன் அதிபரான பிறகு நடந்த முக்கியமான சந்திப்பு அதுவாகும்.
இந்தச் சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் பைடன் நவம்பர் 15-ம் தேதி சந்தித்து பேச உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் அதிபர்களின் சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் பைடன் சந்தித்ததில்லை. இரண்டு முறை மட்டுமே தொலைபேசி மூலம் பேசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.