ரஃபாவை மட்டும் கைப்பற்ற நினைச்சா.. இஸ்ரேலுக்கு அந்த உதவி கிடைக்காது - பைடன் எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ்
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.
இதில், ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்ததோடு, நூற்றுக்கணக்கானோரை பணயக் கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர் தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்தார்.
ஹமாஸ் அமைப்பின் பதுங்கு தளமான காசா மீது இஸ்ரேல் வான்வழி, தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்தது. 7 மாதங்களாக நடந்து வரும் போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர்.
பைடன் எச்சரிக்கை
இதனை முடிவுக்கு கொண்டுவர பல உலக நாடுகள் களத்தில் இறங்கியது.ஆனால் எதுவும் சரிவர அமையவில்லை. ஐநா எச்சரிக்கைக்கும், கவலைக்கும் இஸ்ரேல் செவி சாய்த்த பாடும் இல்லை. மேலும், அமெரிக்காவின் காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தார்.
இந்நிலையில், “ரஃபாவுக்குள் முன்னேறினால் இனிமேல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப் போவதில்லை என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.