"ரஷ்யாவின் சொத்துக்களை கைப்பற்றுவோம்" : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
உகரைன் ரஷ்யாவுக்கு இடையேயான போர் தற்போது 7- வது நாளாக தொடரும் நிலையில், உக்ரைன் தாக்குதலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பாக ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையின் போது பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் :
உக்ரேனியர்கள் தங்களின் நாட்டிற்காக் போராடுகிறார்கள். புதின் போர்க்களத்தில் ஆதாயங்களை பெறலாம் ஆனால் நீண்ட காலத்திற்கு அவர் தொடர்ந்து அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
அமெரிக்க நீதித்துறை, இங்கு உள்ள சில ரஷ்யர்களின் குற்றங்களை கண்காணித்து வருகிறோம், அதே போல் உங்களின் படகுகள், உங்கள் சொகுசு குடியிருப்புகள், உங்கள் தனியார் ஜெட் விமானங்களைக் கண்டுபிடித்து கைப்பற்ற எங்கள் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் நாங்கள் இணைகிறோம்.

அனைத்து விமானங்களுக்கும் அமெரிக்க வான்வெளியை மூடுவதில் நாங்கள் எங்கள் கூட்டு நாடுகளுடன் இணைவோம். என கூறிய ஜோபைடன். தற்போது ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ்வை ராணுவ டாங்கிகளுடன் சுற்றி வரலாம்.
ஆனால் உக்ரேனிய மக்களின் இதயங்களை அவர்களால் வெல்ல முடியாது சுதந்திர உலகின் உறுதியை அவர் ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது.
ஒரு ரஷிய சர்வாதிகாரி, ஒரு வெளிநாட்டை ஆக்கிரமித்ததால், உலகம் முழுவதுக்கும் செலவுகள் அதிகரித்துள்ளது. ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போரில், ஜனநாயகம் வெல்லும் என கூறினார்.