ஜோ பைடன் பதிவியேற்பு: பாதுகாப்பில் ஈடுபடும் அனைத்து வீரர்களையும் கண்கானிக்கும் எஃப்.பி.ஐ
உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அமெரிக்க ஆட்சி மாற்றம் இன்னும் ஒரு சில தினங்களில் நிகழ இருக்கிறது. அதிபர் ட்ரம்ப் செய்த பல்வேறு குளறுபடிகளை கடந்து ஜோ பைடனின் பதவியேற்பு வருகிற 20-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இதனையொட்டி தலைநகர் வாஷிங்டன், வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் ஆகியவை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. வரலாறு காணாத அளவிற்கு 25,000 National Security Guard - NSG வீரர்கள் ஜோ பைடன் பதவியேற்பு விழாவிற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜோ பைடன் பதவியேற்பையொட்டி ஆயுதம் ஏந்தியவர்கள் கலகம் செய்யக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ எச்சரித்திருந்தது. அதைப்போலவே கடந்த 6-ம் தேதி ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதில் பல போலீஸ் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேபிடல் வன்முறை தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களால் ஏதேனும் அச்சுறுத்தல் வந்துவிடக்கூடாது என்பதற்காக அனைவரும் எஃப்.பி.ஐ மற்றும் சி.ஐ.ஏ-வால் தொடர்ந்து கண்கானிக்கப்பட்டு வருகின்றனர்.