ஜோ பைடன் உயிருக்கு ஆபத்து: சி.ஐ.ஏ எச்சரிக்கையால் உட்சபட்ச பாதுகாப்பில் வெள்ளை மாளிகை

bieden trump cia
By Jon Jan 13, 2021 05:28 PM GMT
Report

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வருகிற 20-ம் தேதி பதவியேற்க உள்ளனர். தேர்தல் முடிவுகளை மாற்ற ட்ரம்ப் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ட்ரம்ப் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க ஒன்று கூடிய அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவி கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தலைநகர் வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ட்ரம்ப் பதவிக் காலத்தில் ஒரு வாரமே மீதமுள்ளன. இதற்குள் ட்ரம்ப் வேறு ஏதேனும் விபரீதமாக முடிவெடுத்துவிடுவாரோ எனப் பலரும் அஞ்சுகின்றனர்.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தக்கூடும் என எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது. மேலும் ஜோ பைடன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏவும் எச்சரித்துள்ளதால் அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிபர் பதவியேற்பு தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் இராணுவ வீரர்களையும் நன்கு கண்கானிக்கப்போவதாக பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெற்று விடக்கூடாது எனப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.