பதவியேற்பு விழாவில் டிரம்ப் இல்லாதது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - ஜோ பைடன்

joe-biden-united-states-of-america-donald-trump
By Jon Jan 09, 2021 12:46 PM GMT
Report

அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் அவர்கள் பதவியேற்பு விழாவில் டிரம்ப் பங்கேற்காதது மிகவும் நல்லது என தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று 46வது அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், கொரோனா பிரச்சனை நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். எங்கள் அமைச்சரவையின் பெயர்களை அறிவித்து விட்டதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஆண்களைப் போலவே அதிகமான பெண்களைக் கொண்ட முதல் அமைச்சரவை இதுவாகும். மேலும் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்கான புதிய சட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஹவுஸ் டெமக்ராட்டுகள் திட்டமிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி வருகிற ஜனவரி 20ம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் டிரம்ப் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது ஒரு நல்ல விஷயம் என அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.