உக்ரைனுக்கு இன்று திடீரென பயணம் செய்த அதிபர் ஜோ பைடன் - உற்று நோக்கும் உலக நாடுகள்...!
உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணம் மேற்கொண்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன்
சமீபத்தில் அமெரிக்காவின் மொன்டானாவில் உள்ள அணு ஏவுகணை ஏவுதளத்தில் மிகப்பெரிய சீன உளவு பலூன் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உளவு பலூனை அமெரிக்க அதிகாரிகள் அட்லாண்டிக் பெருங்கடலில் சுட்டு வீழ்த்த முடிவு செய்தனர்.
இதற்கிடையில், சீனா தனது எல்லையில் பறந்த பலூனுக்கு மன்னிப்பு கேட்டது. இதனையடுத்து, சமீபத்தில் தென் கரோலினா கடற்கரையில் அமெரிக்க இராணுவ போர் விமானம் சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது.
6 ரஷ்ய உளவு பலூன்கள் - சுட்டு வீழ்த்திய ராணுவம்
கடந்த வாரம் உக்ரைன் வான்வெளியில் வட்டமடித்த 6 ரஷ்ய உளவு பலூன்களை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. உக்ரைனின் பாதுகாப்புப் படைகள் க்ய்வ் மீது 6 ரஷ்ய பலூன்கள் வான்வெளியில் பறந்தன. உக்ரைனின் தலைநகரில் நேற்று இந்த பலூன்கள் தலைக்கு மேல் பறப்பதைக் கண்டபோது விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. இதனையடுத்து, 6 ரஷ்ய உளவு பலூன்கள் கிவ் மீது உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அதிபர் ஜோ பைடன் திடீர் பயணம்
இந்நிலையில், ஒரு வருடமாக உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், இன்று திடீரென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் இன்று கியேவில் சந்தித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாரத வகையில் உக்ரைன் சென்றுள்ளார். கடைசி வரை அவருடைய பயண விவரம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
⚡️Biden, Zelensky visit the Wall of Remembrance of the Fallen for Ukraine.
— The Kyiv Independent (@KyivIndependent) February 20, 2023
U.S. President Joe Biden and President Volodymyr Zelensky have met in Kyiv on Feb. 20.
Video: Ukrainska Pravda pic.twitter.com/MYwA8iklA5
BREAKING: US President Joe Biden meets his counterpart Volodymyr Zelenskiy in Kyiv during an unannounced visit to Ukraine https://t.co/cMHwBIzcN3 pic.twitter.com/YUOMyACjyO
— Bloomberg (@business) February 20, 2023
A video of Joe Biden's visit to Ukraine.
— NOËL ?? ?? (@NOELreports) February 20, 2023
1/4 - The moment when Biden arrived and was welcomed by Zelenskyi and his wife. Shortly after he met with Ukrainian officials. pic.twitter.com/3iIxmiD32T