உக்ரைனுக்கு அதிபர் ஜோ பைடன் திடீர் பயணம்... - உச்சக்கட்ட கோபத்தில் ரஷ்யா...?
உக்ரைனுக்கு அதிபர் ஜோ பைடன் திடீர் பயணம் மேற்கொண்டுள்ள விவகாரம் தற்போது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன்
சமீபத்தில் அமெரிக்காவின் மொன்டானாவில் உள்ள அணு ஏவுகணை ஏவுதளத்தில் மிகப்பெரிய சீன உளவு பலூன் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உளவு பலூனை அமெரிக்க அதிகாரிகள் அட்லாண்டிக் பெருங்கடலில் சுட்டு வீழ்த்த முடிவு செய்தனர்.
இதற்கிடையில், சீனா தனது எல்லையில் பறந்த பலூனுக்கு மன்னிப்பு கேட்டது. இதனையடுத்து, சமீபத்தில் தென் கரோலினா கடற்கரையில் அமெரிக்க இராணுவ போர் விமானம் சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது.
அதிபர் ஜோ பைடன் திடீர் பயணம்
இந்நிலையில், ஒரு வருடமாக உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், இன்று திடீரென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் இன்று கியேவில் சந்தித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாரத வகையில் உக்ரைன் சென்றுள்ளார். கடைசி வரை அவருடைய பயண விவரம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகை அறிக்கை
இந்நிலையில், இது குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் முதலில் பைடன் போலந்து செல்ல திட்டமிட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக முதலில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி ஓராண்டாகும் நிலையில் பைடன் அங்கு சென்றுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, உக்ரைன் அதிபதிர் ஜெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் பைடன் கீவ் நகரில் நடந்து செல்லும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் கீவ் நகருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றுள்ள விவகாரம் ரஷ்யாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
#POTUS #JoeBiden paid a sudden visit to #Ukraine and met with #Zelensky in #Kyiv. pic.twitter.com/FRliU8VsUh
— The Pacific Journal (@pacificjournal) February 20, 2023