ஜோ பைடன் இதைச் செய்ய வேண்டும்.! கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை தீர்க்க வழி என்ன?

USA Corona Vaccine Joe Biden
By mohanelango Apr 17, 2021 07:39 AM GMT
Report

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒரு வருடத்தைக் கடந்த பிறகும் அசூர வேகத்தில் பரவி வருகிறது.

ஏப்ரல் 16-ம் தேதி நிலவரப்படி உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரழந்துள்ளனர்.

அதே சமயம் கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கிவிட்டன. ஆனால் கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்து கிடைப்பதில் பணக்கார ஏழை நாடுகள் இடையே கடுமையான ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன.

தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளில் பெரும்பாலானவை மேற்குலக நாடுகள் மட்டுமே கொள்முதல் செய்துள்ளன. 

மூன்றாம் உலக நாடுகள், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் தவித்து வருகின்றன. இதற்கு அந்த நாடுகளின் பொருளாதார சூழ்நிலை ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் தடுப்பூசி உற்பத்தி செய்வதில் உள்ள காப்புரிமை சிக்கல்களே முக்கியமான காரணமாக உள்ளது.

ஜோ பைடன் இதைச் செய்ய வேண்டும்.! கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை தீர்க்க வழி என்ன? | Joe Biden Should Relax Vaccine Restrictions

கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதாக சில வர்த்தக விதிகளை தளர்த்த வேண்டும் என இந்தியா, தென் ஆப்பிரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டுவந்த பரிந்துரையை அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் முடக்கியுள்ளன.

கொரோனா தடுப்பூசி மீதான காப்புரிமை தொடர்பான விஷயங்களில் தளர்வுகளை கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. அவ்வாறு செய்தால் பரந்துபட்ட அளவில் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச் செய்ய முடியும் என்கிற கருத்து நிலவுகிறது. 

இதே கருத்தை தற்போது சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா முன்வைத்துள்ளார். 

அதில் அமெரிக்காவுக்குள் வெளியே உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் சார்பாக இந்த கோரிக்கையை உங்கள் முன்வைக்கிறேன். கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் மூலப் பொருட்களின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதே கோரிக்கை சர்வதேச தளத்தில் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.