வசமாக சிக்கிய அதிபர் பைடன்.... - அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் அவரது வீட்டில் கண்டுபிடிப்பு...!

Joe Biden United States of America World
By Nandhini Jan 14, 2023 01:56 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ரகசிய ஆவணங்கள் அதிபர் பைடன் வீட்டில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்திலிருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016ம் ஆண்டு வரையிலான ஆணவங்கள் என்று தெரியவந்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதிபர் வீட்டிலிருந்து கைப்பற்ற அரசின் ரகசிய ஆவணங்கள் குறித்து ராபர்ட் ஹுர் தலைமையில் விசாரணை நடத்த, அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டிருக்கிறார்.  

joe-biden-secret-documents-us-government-his-house