ஜோபைடன் வீட்டுக் கல்யாணம் : அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம்

By Irumporai Nov 21, 2022 02:36 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பேத்தி நவோமி பைடனின் திருமணம் எளிமையாக நடைபெற்றது.

ஜோபைடனின் பேத்திக்கு திருமணம்

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பேத்தி நவோமி பைடன் இவர் வழக்கீலாக வாஷிங்டனில் பணியாற்றி வருகிறார், இவர் தனது கல்லூரியில் பயின்ற 24 வயதான பீட்டரை நீலினை காதலித்து வந்தார்.

ஜோபைடன் வீட்டுக் கல்யாணம் : அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம் | Joe Biden S Granddaughter Marriage

இந்த நிலையில் இவர்களின் திருமணம் எளிமையான முறையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது , இந்த திருமணத்தில் அதிபர் ஜோபைடன் அவரது மனைஅவி ஜில் பைடன் தலமையில்நடைபெற்றது.

எளிய முறையில் திருமணம்

இந்த திருமணத்தில் சுமார் 250 பேர் கலந்துகொண்டனர். இது வரை அமெரிக்க வரலாற்றில் அதிபரின் மகள்களுக்குத்தான் திருமணம் நடந்துள்ளன, முதன் முறையாக அதிபரின் பேத்திக்கு திருமணம் நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது.