எனக்கு பிரச்சனையே நீங்க தான் பண்ணுறீங்க - மோடியை குறிப்பிட்ட ஜோபைடன்!
எனக்கான பிரச்சனையே நீங்க தான் என ஜோக்காக ஜோபைடன், மோடியை குறிப்பிட்டுள்ளார்.
ஜி7 மாநாடு
ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு ஜப்பானின் ஹிரோசிமா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அழைப்பு விடுத்தார். அதனையடுத்து, 3 நாள் பயணமாக மோடி சென்றுள்ளார்.

ஹிரோசிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடக்க வேண்டிய குவாட் மாநாடு ஜப்பானில் நடந்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா அங்கம் வகிக்கின்றன.
சிரிப்பலை
இந்த நாட்டு தலைவர்கள் ஜப்பானின் ஜி7 மாநாட்டில் பங்கேற்ற நிலையில் அங்கேயே குவாட் மாநாடும் நடந்தது. இந்த மாநாட்டின் ஒருபகுதியாக பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோர் இருநாடுகளின் உறவு பற்றி விவாதித்தனர். அப்போது பேசிய ஜோபைடன், ஜனநாயகம் என்பது முக்கியம் என நீங்கள் நிரூபிக்கிறீர்கள்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு நீங்கள் பிரச்சனையை தான் ஏற்படுத்துகிறீர்கள். அடுத்த மாதம் அமெரிக்கா வரும் உங்களுக்கு டின்னர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து அனைவரும் பங்கேற்க விரும்புகின்றனர்.
நிகழ்ச்சிக்கான டிக்கெட் முழுவதுமாக தீர்ந்துவிட்டது. இதை நான் கிண்டல் செய்வதாக நீங்கள் நினைக்கலாம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் புகழ் பெற்றவாக இருக்கிறீர்கள் என கூறினார். இதை கேட்ட பிரதமர் மோடி உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும் சிரித்தனர்.