ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய்; என்னென்ன பாதிப்பு - தற்போதைய நிலை?
ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ-பைடனுக்கு பாலியோமா என்கிற தோல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்த் தொற்று ஏற்படுத்தும் செல்கள் கடந்த பிப்ரவரி மாதம் வெற்றகரமாக அகற்றப்பட்டுவிட்டதாக ஜோ பைடனின் தோல் மருத்துவர் அறிவித்துள்ளார்.

பாசலியோமா புற்று நோய் உயிருக்கு ஆபத்தானது அல்ல. மெலனோசைட்டுகளில் எனப்படும் நிறமி செல்களில் இருந்து உருவாகி மிகவும் தீவிரமாக இருக்கும் மெலனோமாவைப் போலல்லாமல், இந்த வகை தோல் புற்றுநோய் உட்புறத்தில் உருவாகிறது.
தோல் புற்றுநோய்
ஆனால் இது உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவவுவதில்லை. இருப்பினும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது ஆழமாக வளர்ந்து, நரம்புகள், இரத்த நாளங்களைத் தொடும் மற்றும் எலும்பு மஜ்ஜைகளை அடைந்து, அதை சிதைக்கும்.
எனவே, ஆரம்பகால சிகிச்சை பாசலியோமாவைத் தடுப்பதற்கான முதல் ஆயுதமாக உள்ளது. மேலும் சூரிய ஒளியில் வெளிப்படும் பகுதிகளை மட்டும் அவ்வப்போது சுய-கண்காணிப்புடன் நாம் பார்த்துக் கொள்வது நல்லது எனக் கூறப்படுகிறது.