போருக்கிடையில் ஜோ பைடனின் ரகசிய 10 மணி நேர ரயில் பயணம் எப்படி சாத்தியம் - பரபரப்பு தகவல்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்னறிவிப்பின்றி உக்ரைன் சென்ற சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
ஜோ பைடன்
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகிற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எந்த வித முன்னறிவிப்புமின்றி உக்ரைன் சென்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோ பைடனின் இந்தப் பயணத்துக்கான திட்டத்தை வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு முகமை உயர் அதிகாரிகள் பல மாதங்களாக தீட்டி வந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதிகள் வழக்கமாக வெளிநாட்டு பயணங்களுக்கு விமானப்படையின் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தைத்தான் பயன்படுத்துவார்கள்.
உக்ரைன் பயணம்
ஆனால் ஜோ பைடன் வழக்கத்துக்கு மாறாக, உள்நாட்டு பயணத்தின்போது பயன்படுத்தக்கூடிய மாற்றியமைக்கப்பட்ட போயிங் 757 ரக விமானமான ஏர்போர்ஸ் சி-32 விமானத்தில் போலந்துக்கு சென்றார். அங்கிருந்து 10 மணி நேரம் ரெயில் பயணம் மேற்கொண்டு கீவ் நகரைச் சென்றடைந்தார்.

அதனைத் தொடர்ந்து, உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் பிரிட்ஜெட் பிரிங்க் அவரை வரவேற்றார். அப்போது போலந்து நாட்டின் வான்வெளியில் இருந்து அமெரிக்க கண்காணிப்பு விமானங்கள், கீவ் நகரை கண்காணித்துக்கொண்டிருந்தன.