அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் - ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

Cancer Donald Trump Joe Biden Narendra Modi
By Sumathi May 19, 2025 10:38 AM GMT
Report

ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தவர் ஜோ பைடன். இவர் சிறுநீரக தொற்று அறிகுறி காரணமாக மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார்.

trump - joe biden

இதில், அவருக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜோ பைடனுக்கு சிகிச்சையளிப்பது குறித்து அவரது குடும்பத்தினருடன் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நெருங்கும் பேரழிவு; பூமி அழியும் நேரம் இதுதான் - ஆய்வாளர்கள் துல்லிய கணிப்பு

நெருங்கும் பேரழிவு; பூமி அழியும் நேரம் இதுதான் - ஆய்வாளர்கள் துல்லிய கணிப்பு

டிரம்ப் ஆறுதல்

இதுகுறித்து ''தீவிரமான வகைப் புற்றுநோயாக இருந்தாலும் அதை குணப்படுத்த முடியும்'' என பைடனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், ''புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது'' என ஜோ பைடன் கூறியுள்ளார்.

அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் - ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா? | Joe Biden Diagnosed Prostate Cancer Trump Feels

இந்நிலையில் ''ஜோ பைடனின் சமீபத்திய மருத்துவ நோயறிதலைப் பற்றி அறிந்து நான் வருத்தம் அடைந்தேன். அவர் விரைவாகவும், வெற்றிகரமாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்'' என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ''ஜோ பைடன் உடல்நிலை குறித்து செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். அவர் விரைவில் குணம் அடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்'' என மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.